சென்னையிலிருந்து வேலூருக்கு செல்லும்பொழுதெல்லாம் அந்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலின் வளர்ச்சி என்னை எண்ணிப்பார்க்க வைத்தது. கற்பூரம் ஏற்றப்படாமலும் சந்தனம் மணக்காமலும் இருந்த இந்தக் கோயில், 1968 ஆம் ஆண்டு வெளிச்சம் பெறத் தொடங்கியது. சச்சிதானந்தம் என்ற முருகனின் அடியேன் இக்கோயிலை புகழ் பெற செய்தார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற மந்திரம் இக்கோயிலுக்கு சான்றாகிறது. அது மட்டுமின்றி குன்றுதோறாடல் எனப்படும் திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி, திருச்செந்தூர், திருவேரகம், பழமுதிர்ச்சோலை வரிசையிலும் இந்த ரத்தினகிரி திருக்கோயில்.
சிவப்பெருமானிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன் தேவர்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்தான். இதை அறிந்த இந்திர தேவன் ரத்தினகரி சென்று முருகனை நாடியப்போது, இந்திரனை தனது மயில் வாகனமாக மாற்றிக்கொண்டார் முருகன். அசுரன் ஏமாற்றத்துடன் திரும்பினான். தேவர்களைக் காத்த பெருமாளே என்று பொருள்பட ரத்தினகிரி வாழ் முருகனே இளைய வாரமரர் பெருமாளே என்று அருணகிரிநாதர் திருப்புகழில் இந்நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். மற்றோரு விதமாகக் குழந்தை வரம் வேண்டிக் கோயிலைச் சுற்றி வந்த ஒரு பெண்மணிக்கு முருகன் காட்சி அளித்துக் குழந்தை பாக்கியம் அளித்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதுவே இங்கு வரும் பக்தர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்பாலிக்கிறது. இங்கு முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் ஒரு கோலத்திலலும், மற்றொன்றாகக் குரு கோலத்திலும் காட்சியளிப்பது தனிச்சிறப்பு.
சச்சிதானந்தம் என்ற இளைஞனின் இதயத்திலிருந்து எழுச்சிப் பெற்றது இந்த ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில். தனது 27 ஆம் வயதில் அவர் தொடங்கிய ஆண்மீக பயணம் இன்றும் தொடர்கிறது. 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் ஒரு காலத்தில் இருளில் மூழ்கியிருந்தது. கந்தசாமி முதலியாரின் மகனான சச்சிதானந்தம் என்ற இளைஞன் மின்சார துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது, ஒரு நாள் பணிக்குச் செல்லாமல் குன்றின் மீது அமைந்துள்ள முருகன் கோயிலுக்குச் சென்றார். 27 வயது இளைஞனின் பாதை தவறான வழியில் சென்றிருக்க வேண்டும் என்பதே இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது, ஆனால் அவரின் எண்ணம் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டது. மேலே சென்று முருகனை பார்த்த சச்சிதானந்தம் அதிர்ச்சியில் உறைந்தார். கற்பூரம் ஏற்றப்படாத சன்னதியும், சந்தனம் மணக்காத முருகனின் திருவுருவமும் நிலைகுலையச் செய்தது. பூஜைகள் நடக்காத முருகனை நினனத்து மனமுடைந்தார். தூனில் சாய்ந்தார். ஞானம் பெற்றார். கோயிலை மேம்படுத்தாமல் மலையிலிருந்து வரமாட்டேன் என்று கீழ்மின்னல் மக்களுக்குப் பதில் தந்தார். அந்தப் பதிலே அவருக்குப் பாலமுருகன் அடிமை என்ற பெயரைத் தந்தது.
156 படிகளைக் கொண்ட இந்த ஆலயம் சச்சிதானந்ததின் தந்தையான கந்தசாமி முதலியாரின் முயற்ச்சியால் 1936 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பராந்தக சோழனின் மகன் ராஜ ராஐ சோழனால் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது. கந்தசாமி முதலியாரின் மகன் சச்சிதானந்தம் என்பவரால் ரத்தினகிரி கோயில் வளர்ந்தது. மகன்களின் சாம்ராஜ்யம் அரசியலில் மட்டுமின்றி கோயில்களின் வளர்ச்சியிலும் நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 1938 ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது, பிறகு 1973 முதல் 2003 வரை பாலமுருகன் அடிமை தெடர்நது இத்திருத்தலத்தின் கட்டிட கலையைய் உயர்த்தினார், இதில் கோயிலின் ராஜ கோபுரம் மட்டுமின்றி தங்கும் வசதி, பள்ளிக்கூடம், கனினி பயிற்சி மையமமும் அடங்கும். அரசியலிலிருந்து இருந்து தான் நல்லது செய்வேன் என்று பிடிவாதம் கொண்டவர்களுக்கு ரத்தினகிரி பாலமுருகன் அடிமை ஒரு சான்று.
கோயிலின் சிறப்பு
தமிழில் அர்ச்சனை
கோயில் நேரம்
6.00 am - 1.00 pm
4.00 pm - 8.00 pm
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வேலுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்குச் செல்லும் வழி
விமானம்மூலம்
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் சென்னை விமான நிலையம் சுமார் 118km தொலைவில் அமைந்துள்ளது.
ரயில்மூலம்
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு அருகில் திருவலம் ரயில் நிலையம் 7km தொலைவிலும், காட்பாடி ரயில் நிலையம் 11km தொலைவிலும் அமைந்துள்ளது.
பேருந்துமூலம்
வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 13 கிமீ தொலைவில் ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ஏராளமான பேருந்துகள் வேலூர் வழியாக இயக்கப்படுகின்றன. இத்திருத்தலம் வேலூருக்கும் ஆற்காடுக்கும் இடையே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அமைந்துள்ள இடம் கீழே காணலாம்.