கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் என்று நான் சொன்னால் அது உங்களுக்கு சமீபத்திய நிகழ்வான ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 2.6.2023 அன்று நடந்த ரயில் விபத்தையே நினைவுப்படுத்தும். வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்திருப்பார்கள் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முக்கிய மாநிலங்களை இணைக்கும் இந்த கோரமண்டல் ரயிலில், சுற்றுலா சென்றவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்பதையும் நினைவில் கொண்டேன்.
ரயில் பயணம்
அப்படி என்ன இருக்கிறது இந்த ரயில் பயணத்தில் ? குலு குலு வென 3A 2A 1A coach தரும் சுகங்களை அனுபவித்து கொண்டு பயணம் செய்வதா அல்லது Sleeper Class-ன் சில்லென்ற காற்றை ஸ்வாசித்து மரங்களின் நகர்வை ரசித்து செல்வதா ? இதையும் மீறி Unreserved Compartment-ல் வரும் கண் தெரியாத மனங்களின் புல்லாங்குழல் ஊதலும், பிழைப்புக்காக சமோசா விற்கும் சத்தமும் நம்மை ஒரு பயணத்தின் போது பறவசம் அடைய செய்கிறதே. அந்த பரவசம் கோரமண்டல் ரயிலின் கோரத் தாணாடவத்திற்கும் பொருந்திருக்கும் அல்லவா ?
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெயர்
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த (12842) Coromandel Express-ல் சுமார் 430 km கடந்து விஜயவாடா ரயில் நிலையத்தை சந்திக்கும் நேரம் நம் மனம் கனக துர்கை கோயிலுக்கு செல்ல தூண்டுகிறது. இதே போல் (12841) Coromandel Express, ஷாலிமரில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் நீண்ட ரயில் நடைமேடைகளில் ஒன்றான கரக்பூரை கடந்து வந்து, ஒடிசா மாநிலத்தில் நுழைந்து பாலசோர் வழியாக வங்காள விரிகுடாவான கோரமண்டல் கரையோரம் பயணித்து புவனேஸ்வர் ரயில் நிலையத்தை அடைகிறது. இங்கேயே நமக்கு லிங்கராஜர் கோயிலும் நினைவுக்கு வருகிறது. மாறாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட Coromandel Expressம் விசாகப்பட்டினம் வழியாக வங்காள விரிகுடாவின் காற்றை சுவாசித்து பயணத்தை தொடர்கிறது. கோரமண்டல் கரையோரம் பயணிப்பதால் Coromandal Express என்ற பெயரும் அமைகிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணம்
130 km வேகத்தில் பயணிக்கும் இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், Southern Eastern Railway-இன் கீழ் இயங்குகிறது. இந்த நீண்ட தூர ரயிலில், அதாவது சென்ட்ரல் முதல் ஷாலிமர் வரை பயணம் செய்தால் 1659 km பயணிக்க முடியும், அந்த பயணம் சுமார் 28 மணி வரை நேரம் நீடிக்கிறது. இதே போல் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வரும் கோரமண்டலில் பயணித்தால் சுமார் 26 மணி நேரத்திற்குள் வந்து சேர முடியும். இது Howrah-Chennai Mail-ஐ விட குறைவான நேரத்தில் பயணிக்கிறது. விஜயவாடாவில் இருந்து சுமார் 430 km நிற்காமல் சென்னை வந்தடைகிறது. எத்தனை சிறப்புகள் இந்த கோரமண்டல் ரயிலுக்கு ! இது மட்டுமா ? இன்னும் சொல்லி கொண்டே போகலாம், எத்தனை ஆறுகளை அது கடந்து செல்கிறது தெரியுமா ? பென்னை, பாலாறு, கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி என்று இன்னும் பல.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சுற்றுலா
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸின் விபத்துக்கான காரணம், சரக்கு ரயிலில் இருந்த மணல், கற்கள் ஏதாவது விழுந்து Point Blades நகரவில்லையா என்று தெரியவில்லை அல்லது interlocking பிரச்சினையா என்றும் தெரியவில்லை. எது எப்படியோ அது அப்படியே என்று புரிந்து கொண்டேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தால் பல மாநிலங்களின் கோயில்களுக்கு செல்ல வழிவகுக்கும் ஆம் சென்னை, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் வரை நம்மை சுற்றுலா செல்ல வழிவகுக்கிறது. அது மட்டுமன்றி கோரமண்டல் கரை என்று சொல்லப்படும் வங்காள விரிகுடாவின் காற்றை தொட்டு செல்கிறது. மகாநதி, கோதாவரி போன்ற முக்கிய ஆறுகளின் இடையே பயணம் செய்கிறது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தான அன்று உயிர் பிரிந்தவர்கள் யார் எங்கே சுற்றுலா சென்றிருக்க கூடும் என்று எண்ணி வேதனை அடைந்தேன் ஆனால் அவர்களின் ஆன்மா இனி கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்யும் ஒவ்வோருவரையும் பாதுகாக்கும் என்று என்னை ஆறுதல் படுத்திக் கொண்டேன்.